இந்தியாவில் சுமார் 100 பேரை கொலைசெய்ததுடன், சட்டவிரோதமாக 125 சிறுநீரக மாற்றுசத்திரசிகிச்சைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஆயுர்வேத டாக்டர் ஒருவரை  டெல்லி  பொலிஸார் கைது செய்ததன்மூலம் மிகவும் பயங்கரமான குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

62 வயதான தேவேந்திர சர்மா எனும் இவர்? ஆயுர்வேத  மருத்துவப் பட்டம் பெற்றவர், இவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொலை செய்ததாகவும் சிறுநீரக மோசடிகளில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

டெல்லியிலும் அதன் அயல் நகரங்களிலும் ட்ரக் மற்றும் வாடகைக் கார் சாரதிகள் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் 62 வயதான தேவேந்தர் ஷர்மா என்பவர்தான் சூத்திரதாரியாக உள்ளார் எனக் கூறப்படுகிறது,

சிறுநீரக மாற்று மோசடிகள், போலி எரிவாயு முகவர் நிலைய செயற்பாடு, வாகனங்களை திருடி விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களிலும் அவர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தர பிரதேசத்தில் தன்னிடம் சிக்கியவர்களை அவர் எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்தும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை முதலைகள் உள்ள கால்வாய்க்குள் எவ்வாறு போடுகிறார் என்பது  குறித்தும் அறியக்கிடைத்தபோது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதையும் அவர் ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் எத்தனை பேரைக் கொலை செய்தார் என்பதற்கான சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை.
பொலிஸார் அவரை கடந்த வாரம் கைது செய்து விசாரணை செய்தபோது, 50 பேரைக் கொலை செய்த பின்னர் எண்ணிக்கையை கணக்கிடவில்ல என தேவேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.

20004 ஆம் ஆண்டு முதல் 16 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்? நன்னடத்தை அடிப்படையில் 20 நாட்கள் வெளியில் செல்ல கடந்த ஜனவரி அனுமதிக்கப்பட்டார்,
பொலிஸாரிடம் எங்கும் தப்பிச் செல்வதில்லை என வாய்மொழிமூல உறுதி வழங்கிய அவர் விடுவிக்கப்பட்டார், எனினும் பின்னர் தலைமறைவானார்,

டெல்லியின் புறநகர் பகுதியான பாப்ரோலாவில் அவர் ஒழித்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து பொலிஸாரால் தேவேந்திர சர்மா கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

உத்தர பிரதேசத்தில் போலி எரிவாயு முகவர் நிலையம் நடத்தியமைக்காகவும் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டமைக்காகவும் இரண்டு தடவைகள் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் தனது போலி முகவர் நிறுவனத்துக்கு தேவைப்படும் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக வீதியால் செல்லும் எரிவாயு விநியோக ட்ரக் வண்டிகளை மறித்து அதன் சாரதிகளைக் கொலை செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் வாகனங்களைக் கைப்பற்றுவதற்காக வாடகை;கார் சாரதிகளை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளநிலை பட்டம் பெற்ற பின்னர் ஜெய்பூரில் 1984இல் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்த அவர் 1992இல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் முதலீடு செய்தார். ஆனால் அதில் ஏமாற்றப்பட்டார்.

அதன் பின்னர் ஜெய்பூர், பல்லாபகார், குர்காவோன், உட்பட மற்றும் சில இடங்களில் மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட மாற்று சிறுநீரக மோசடியுடன் தேவேந்திர சர்மா  1984இல் தொடர்புபட்டார்.

1995இல் போலி எரிவாயு முகவர் நிறுவனம் ஒன்றை அம்ரோஹாவில் ஆரம்பித்தார். ஆனால் அங்கு அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

எரிவாயு மோசடி தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்ட போதிலும் கொலைகள் பற்றி தீர்வுகள் எதுவும் காணப்படவில்லை.

அதன் பின்னர் 2003வரை ஜெய்பூரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த அவர், வாடகைக் கார் சாரதிகளைக் கொலை செய்து அவர்களது உடல்களை முதலைகள் உள்ள கால்வாயில் போட்டுவந்தார்.

அத்துடன், திருடப்பட்ட வாடகைக் கார்களை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்று இந்திய நாணயப்படி 20,000 ரூபா முதல் 25,000 ரூபாவரை சம்பாதித்துவந்தார்.

1994முதல் 2004வரை 125 சட்டவிரோத மாற்று சிறுநீரகங்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 5 இலட்சம் ரூபாவிலிருந்து 7 இலட்சம் ரூபாவரை பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குர்கான் நகரில் இடம்பெற்ற சிறுநீரக மோசடி தொடர்பாக 2004இல் அவரும் இன்னும் பல டாக்டர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

2002க்கும் 2004க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறு கொலைகளுக்காக ஷர்மா கைதுசெய்யப்பட்டபோதிலும் ஏழு சம்பவங்களிலேயே அவர் குற்றவாளியாக காணப்பட்டார்.

அவரது குற்றச்செயல்களை அறிந்து கொண்ட மனைவியும் பிள்ளைகளும் 2004இல் அவரைப் பிரிந்து சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாய்மொழிமூல உறுதிப்பாட்டை மீறி டெல்லிக்கு சென்ற தேவேந்திர சர்மா, அங்கு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க எண்ணி தனது தூரத்து உறவினரான விதவை ஒருவருரை திருமணம் செய்துகொண்டார்.

அந்த விதவையும் அவரது குற்றச்செயல்களின் பின்னணியை அறிந்திருந்தார்.
அங்கு சொத்துடமை விற்பனையை ஆரம்பித்த அவர் மார்ஷல் ஹவுஸ் என்ற இடத்தை விற்பனை செய்வதற்காக பேரம்பேசி வந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

‘முன்னர், டெல்லியின் மோகன் கார்ட்னில் அறிமுகமானவர் ஒருவரது வீட்டில் வாழ்ந்துவந்த சர்மா, பின்னர் பாப்ரோலாவுக்கு சென்று அங்கு ஒரு விதவையை மணதந்தார்.

அவர் பற்றிய தகவல் கிடைத்ததும் எமது அணியினர் அவரை கடந்த வாரம் கைது செய்தனர்’ என குற்றவியல் பிரதி பொலிஸ் ஆணையாளர் ராகேஷ் பாவேரியா தெரிவித்துள்ளார்,

 

Share.
Leave A Reply

Exit mobile version