கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரகோட்டை கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரது மகள் பிரியங்கா தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 68வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமிழக அளவில் யூபிஎஸ்சி தேர்வில் இரண்டாவது இடம் பெற்ற ஐஸ்வர்யாவின் தந்தை ராமநாதன் முந்திரி விவசாயியாக இருக்கிறார்.

ஐஸ்வர்யா, கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுமான துறையில் பொறியியல் படிப்பை 2017ஆம் ஆண்டு முடித்தார்

Share.
Leave A Reply

Exit mobile version