டுபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) பறவைகள் கூடுகட்டி வாழ தனது காரை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

குறித்த இளவரசர் அந் நாட்டின் நிர்வாக சபைத் தலைவராகவுள்ளதோடு அந் நாட்டு விலங்கியல் பூங்காவிலுள்ள ஏராளமான விலங்குகளைத் தத்தெடுத்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனாத் தொற்றுப்பரவல் காரணமாக அவர் தனது காரினை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமையினால் அக் காரின் முகப்புப் பகுதியில் பறவையொன்று கூடுகட்டியுள்ளது.

 

குறித்த கூட்டை கலைக்க விரும்பாத அவர் அக் காரினைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான வீடியோவொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version