ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்தது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எந்த உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே பொதுவாக வெற்றியைப் பெற்று வருவது வழமை. ஆனால், இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எந்த ஒரு உறுப்பினரும் தெரிவாகவில்லை. கொழும்பில் எந்த ஆசனத்தையும் பெறாமல் தோல்வியடைவது இதுவே முதல் தடவையாகும்.

