ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என சஜித் பிரேமதாசவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் 7தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கும் சிங்களவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு த.மு.கூ, ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகள் அவசர கூட்டமொன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன.

அதற்கமைய நேற்று சனிக்கிழமை நடைபெற்ற குறித்த கூட்டத்தில் “ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் த.மு.கூ, ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய சிறுபான்மை கட்சிகள், நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டிய நிலையை ஏற்படுமென மனோ கணேசன் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் 7 தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கும் சிங்களவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை ஐ.ம.ச. தலைமையால் எடுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே நேற்றிரவு அவசர கூட்டத்தை தமுகூ , ஸ்ரீலமுகா, அஇமகா கோரியிருந்தன.நேற்று நள்ளிரவு வரையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version