வவுனியாவில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

குறித்த முதியவர் பயணம் செல்லும் முகமாக வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அங்கு தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோ சாலைக்கு சொந்தமான பேருந்து பின்பகுதி நோக்கி செலுத்தப்பட்டிருந்தது. இதன்போது பேருந்தின் பின்பகுதியில் நின்றிருந்த முதியவரை மோதிதள்ளியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர்சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version