p>
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்காக நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ளன.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டகளுக்கான நேர அட்டவணை கல்வி அமைச்சின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன விரைவில் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சாத்திகளுக்கு வீடுகளும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.