இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பான போலிச்செய்திகளால் உலகம் முழுவதும் சுமார் 800 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவ ஆய்வு நிலையம் (American Journal of Tropical Medicine and Hygien) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சமூக வலைத்தளங்களில் வெளியான போலிச்செய்திகளின் விளைவாக சுமார் 5,800 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பலர் மெத்தனோல் அல்லது அல்ககோல் சார்ந்த தொற்றுநீக்கி உற்பத்தி  பொருட்கள் கொரோனாவை குணப்படுத்தும் என நம்பி குடித்து உயிரிழந்துள்ளார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) கொரோனாவை சுற்றியுள்ள தவறான தகவல்கள் வைரஸைப் போலவே விரைவாக பரவுகிறது. அத்தோடு சதிக் கோட்பாடுகள், வதந்திகள் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் அனைத்தும் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு பங்களிப்பு செய்வதாக முன்னர் தெரிவித்திருந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் நம்பகமான மருத்துவ தகவல்களைப் போன்ற ஆலோசனையைப் பின் பற்றினர். அதாவது தொற்றுநோயைத் தடுக்கும் ஒரு வழியாக அதிக அளவு பூண்டு சாப்பிடுவது அல்லது அதிக அளவு விட்டமின்களை உட்கொள்வது போன்றவை செய்துள்ளதாக ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனையவர்கள் மாட்டு சிறுநீர் போன்றவற்றையும் குடித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தில் “தீவிரமான தாக்கங்களை” கொண்டிருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தவறான தகவலின் பரந்த மற்றும் விரைவான பரவலுக்கு எதிராக போராடுவது சர்வதேச முகவர், அரசாங்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பொறுப்பு என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மோசடி செய்பவர்களுக்கு தொற்றுநோயைப் பயன்படுத்த உதவுகின்றன. வைரஸைத் தடுப்பதாகக் கூறும் பயனற்ற பேட்ஜ்களை விற்பனை செய்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version