50,000 பட்டதாதரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட 100,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் செயற்தி;ட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று  வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது

இதேவேளை ஏற்கெனவே தொழில் நியமன கடிதம் கிடைத்தவர்களை அவருகிலுள்ள மாவட்ட செயலகங்களுக்கு (அரசாங்க அதிபர் ) அலுவலகம் செப்டெம்பர் முதலாம் திகதி சமுகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், மேற்படி வேலைவாய்ப்பு வழங்கல் நடவடிக்கை ஆரம்பி;க்கப்பட்டிருந்தது.

ஆனால் பொதுத் தேர்தல் காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இவ்வேலை வாய்ப்பு வழங்கும்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள்  ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்  (www.presidentsoffice.gov.lk/) நாளை மறுதினம ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கழமை  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் 17 ஆம் திகதி தபாலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான பட்டதாரிகளின் பெயர்கள் மேற்படி பட்யலில் இல்லாவிட்டால் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version