வெள்ளவத்தை பகுதியில் புகையிரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்ஷி பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை – காலி வீதி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version