யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விபரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.

முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த இராணுவத்தினரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறியதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், மக்களின் விபரங்களை புதிப்பிப்பதற்காகவே இவ்வாறு இராணுவத்தினர் தகவல்களை திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version