போர்ச்சுகல் அதிபர் 71 வயதான மார்செலோ ரெபெல்லோ டிசெளசா, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விடுமுறையைக் கழிப்பதற்காக அல்கார்வே கடற்கரை நகருக்குச் சென்றிருந்தார்.

அப்போது, அங்குள்ள பிரையா டூ அல்வார் கடற்கரையில் அதிபர் மார்செலா நீந்திக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோதுதான், நடுக்கடலில் பெண்கள் தவிப்பதைக் கண்டார்.

உடனே விரைவு படகில் சென்ற அவர், விறுவிறுப்பாக இருவரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்துவந்தார்.

ஒரு ஹீரோவைப்போல சென்று பெண்களைக் காப்பாற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் பாராட்டுகளைக் குவித்துவருகின்றன.

71 வயதிலும் ஓர் இளைஞரைப் போல செயல்பட்ட அதிபர் மார்செலாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version