ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்று முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இந்தநிலையிலேயே குறித்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 27 திகதி காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version