கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக எட்டு இலட்சத்து மூவாயிரத்து 200பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இதுவரை மொத்தமாக கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டு கோடியே 31இலட்சத்து 17ஆயிரத்து 813பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக, ஒரு கோடியே 57இலட்சத்து ஒன்பதாயிரத்து 677பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அதற்கு அடுத்தப்படியாக பிரேஸில் இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version