கண்டி – குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்கலன் லொறியொன்றுடன் மோதிய கார் பின்னர் மேலும் ஒரு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இரு கார்களில் பயணித்த ஐவர் உட்பட லொறியின் சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இரண்டு வயது சிறுமியும் அவரது தந்தையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நிலம்பா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தந்தை மற்றும் 2 வயதுடைய சிறுமியொருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version