தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்தியதாக கூறப்படும் வெடிப்பு சம்பவத்தில் குண்டுதாரி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜோலோவின் தலைநகரில் திங்களன்று சுமார் பிற்பகல் (04:00 GMT) இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ரிச்சர்ட் கார்டன் தெரிவித்தார்.
ஜோலோவில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகம் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 11 காலாட்படைப் பிரிவின் சிவில் இராணுவ உறவுகள் அதிகாரி லெப்டினன்ட் கேணல் ரொனால்ட் மேடியோ, அந் நாட்டு செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.