பொகவந்தலாவ பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்த சிறுமி முச்சக்கரவண்டி ஒன்றில் மோதுண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (23) முற்பகல் 11 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொட்டியாகலை பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகர பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியில் குறித்த சிறுமி மோதுண்டதோடு குறித்த சம்பவம் பொகவந்தலாவ நகரில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயங்கள் எதுவும் குறித்த சிறுமிக்கு ஏற்பவில்லையெனவும் முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்த போது வீதியினை கடக்க குறித்த சிறுமி முற்பட்ட போதே முச்சக்கர வண்டியில் மோதுண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version