தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் காணாமல் போயிருந்தால், அவர்களைக் தேடவேண்டிய அவசியம் இல்லை எனத் தான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிவதற்காக அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் பட்டியலில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு அல்லது நிவாரணங்களை வழங்குவதென்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவது சரியா? எனவும், அமைச்சர் கேள்வி எப்புப்பினார்.

Share.
Leave A Reply

Exit mobile version