யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது.
பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.