கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி – திகன பகுதியில் இரவு 8.40 மணியளவில் பாரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியை சேர்ந்த மக்களால் அது உணரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்ட தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் அருன வால்பொல கருத்து வெளியிடுகையில், நிலநடுக்கம் ஏற்படவில்லை. சிறிய அளவில் குலுக்கல் உணரப்பட்டதாகவும், அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் என வெளியான தகவல்களை அடுத்து கண்டி – திகன பகுதி மக்கள் பெரும் அச்சத்தல் உள்ளதாக தெரிய வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version