மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதுடன் அதில், சசிகுமார் கௌசல்யா (38-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் காட்டுப் பகுதியில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற மடு பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பண்டிவிருச்சான் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version