தென் அமெரிக்கா : ஈகுவடோரில்(Ecuador )வசித்து வரும், 110 வயதான ஜூலியோ சீசர் மோரா(Julio Ceasar Mora ) மற்றும் அவரது மனைவியான 104 வயதான வால்ட்ராமினா குயிண்டேரோ(Waldramina Maclovia Quinteros) ஆகியோர் , உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் இத் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட விவாகரத்து குறித்து சிந்தித்ததில்லை என்றும் அன்பு, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை, சரியான கல்வி உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.