பழ வண்டியொன்றை திருடியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, கொச்சிகடை தேவாலயத்துக்கு முன்பாக,யாசகர், மஹரகம- பமுனுவ பிரதேசத்தில் கோடீவரொருவர் என்று கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய இவருக்கு இரண்டுமாடி வீடொன்று சொந்தமாக உள்ளதுடன், அதில் கீழ் பகுதியை மாதாந்தம் 30,000 ரூபாய்க்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன், வெகன் ஆர் காரொன்றும், மற்றுமொரு சொகுசு காரொன்றும் இவருக்கு சொந்தமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொச்சிகடை- ஜெம்பட்டா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாய் பெறுமதியான பழ வண்டியொன்றை திருடியமைத் தொடர்பில், வண்டியின் உரிமையாளர் கரையோர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய கரையோர பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, சந்தேகநபர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளுக்கமையவே, யாசகம் செய்யும் குறித்த சந்தேகநபர், கோடீஸ்வரர் என தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version