தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். <தொடர்ந்தும் பேசிய அவர்,

“இலங்கையானது பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிடார்கள். அதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணம்.

அவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி கேட்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் ஆவர்.

அவர்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை. இராணுவமே அவர்களை கொலை செய்தது என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version