இலங்கையில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கே கொரோனா தொற்றியுள்ளது.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3071ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டாரில் இருந்து வந்த மேலும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக நேற்றைய தினம் உறுதியாகியது.
அதற்கமைய கட்டாரில் இருந்த வந்த 54 பேர் நேற்று மாலை முதல் இன்று காலை 10 மணி வரை வரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 398 பேருடன் கட்டாரில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.