லொஸ் ஏஞ்சலஸில் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3000 அடி உயரத்தில் விமானமொன்றிற்கு மிக அருகே நபரொருவர் ஜெட் பக்கில் (Jet Pack) பறந்து சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த நபர் விமானத்திற்கு அருகே 30 அடி தூரத்தில் பறந்து சென்றதாக அமெரிக்கன் மற்றும் ஜெட்புளூ விமானிகள் தெரிவித்துள்ளனர்.

 

இச் சம்பவமானது அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை நிர்வாகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து விடுவோம் எனவும் FBI தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version