பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வியாழக்கிழமை இதயத் துடிப்பு சமிக்ஞை ஒன்று கண்டறியப்பட்டது.

பெய்ரூட் நகரை மொத்தமாக சிதைத்த வெடி விபத்து நடந்து சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில் இந்த இதயத்துடிப்பு சமிக்ஞையானது மீட்புக் குழுவினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ரூட்டில் அந்த பயங்கர வெடி விபத்துக்கு பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளனர்.

வியாழனன்று சிலி நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழு ஒன்று இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி யாரோ உயிருடன் இருப்பதற்கான சாத்தியத்தை அவர்கள் கண்டுபிடித்ததாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

முதலில் மோப்ப நாய் ஒன்று கட்டிட இடிபாடுகளுக்கு இடையே புகுந்து எதையோ தேடியதாகவும்,

தொடர்ந்து நவீன கருவி ஒன்றின் உதவியுடன் ஆய்வு செய்ததில், நிமிடத்திற்கு 18- 19 என்ற அளவில் நாடித்துடிப்பு கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த இதயத்துடிப்பு வெளியான பகுதியானது உடனடியாக கண்டறியப்படவில்லை என்றாலும், மீட்புக் குழுவினருக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கோர வெடிவிபத்துக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் சாத்தியமற்ற ஒன்று,

ஆனால் சிலி தன்னார்வலர் ஒருவர், அவர்களின் உபகரணங்கள் மனிதர் ஒருவரின் நாடித்துடிப்பை கண்டறிந்ததாக உறுதி செய்துள்ளார்.

தொடர்ந்து அந்த பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, தீவிர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version