திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதிலொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04.09.2020) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் முள்ளிப்பொத்தானை- யூனிட் – 08 பகுதியைச் சேர்ந்த நசீர் முஸ்ரிப் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

உடைந்திருந்த மதிலுக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மதில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்ததாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version