மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று மாலை சிறுமி ஒருவர் குளத்தில் தவறி வீழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குகனேசபுரம் ஆலம்குளத்தினை சேர்ந்த ச.விஜயரூபினி,  12 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது சகோதரியுடன் தமத வீட்டுக்க அருகில் உள்ள குளக் கட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி குளத்தில் உள்ள மடுவில் குறித்த சிறுமி வீழ்ந்துள்ளார். பின்னர் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவிணர்களிடம் ஒப்படைப்படவுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் தாயார் கணவினால் கைவிடப்பட்ட நிலையில் தமது 3 பெண் பிள்ளைகளையும் ஆடு மேய்க்கும் கூலித் தொழில் ஈடுபட்டு தமது வாழ்வாதரத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்வதில் பொருளாதார சிக்கல் நிலையினை எதிர்நோக்கியுள்ளதாகவும்  பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இச் சம்பவமானது குறித்த பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version