பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது.

அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது.

மெக்சிகோ ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன.

போலி சான்றிதழ்களை தடுக்க சான்றிதழ்கள் சிறப்பு படிவங்களில் அச்சிடப்படுகின்றன.

மெக்சிகோவில் மரண எண்ணிக்கை

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்று காலை 11 மணி நிலவரப்படி மெக்சிகோவில் கொரோனாவால் 6,37,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 67,781 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 5,31,334 பேர் மீண்டுள்ளனர்.

ஆனால், உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாகவே இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் பல மரணங்கள் கொரோனா மரணங்களாக கணக்கிடப்படவில்லை என்கின்றனர்.

கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், மெக்சிகோ நான்காவது இடத்திலும் உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version