வவுனியா பழைய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் வெளி பகுதிகளிலிருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு செல்லும் ஏனைய பெண்களையும் வர்த்தக உரிமையாளர்களையும் இச் செயற்பாடு அதிகம் பாதிக்கின்றது. எனவே நகரின் பிரதான பகுதியில் இடம்பெற்று வரும் பாலியல் தொழிலினைக் கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் பிரபாகரன் ஜானுஜன் எழுத்து மூலமாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார்

அதில் மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அண்மைக்காலமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது இதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் , பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர் . அங்கு வரும் ஆண்கள் சிலர் ஏனைய பெண்களையும் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களாக நினைத்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது .

எனவே நகரசபை உறுப்பினர் என்ற ரீதியில் இந்நடவடிக்கையினை கட்டுப்படுத்த பொலிசார் துரித நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version