இலங்கை பணிப்பெண் ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைசெய்த சந்தேகத்தில் குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

46 வயதான இலங்கை பணிப்பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக அல் அமிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இவர் , தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிலமணி நேரங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் தீ, வெட்டுக்காயங்கள்,  இருப்பது பரிசோதனையின் போது கண்டரியப்பட்டதையடுத்து குறித்த பெண்னை வேளைக்கு அமர்த்திய குவைத் தம்பதியினர்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version