திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முப்பது வயது பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய  ஒரு பிள்ளையின் தந்தையொருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (13) உத்தரவிட்டார்.

ஸ்ரீமங்கலபுர,சோமபுர சேருநுவர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முப்பது வயதுடைய குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்த போது வீட்டுக்குள் புகுந்து  வல்லுறவுக்குட்படுத்தியதாக  சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்துததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட  பெண்ணின் கணவன் இராணுவ படைப்பிரிவில் கடமையாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தலத்தில்) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version