யுக்ரைனில் பிறந்து ஒரு வாரமான தனது குழந்தையை தாயொருவர் பிளாஸ்டிக் பையொன்றில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

யுக்ரைனின் தலைநகர் கீவை சேர்ந்த 29 வயதான இந்த பெண் தனது குழந்தைக்கு, குளிர்காலத்துக்கு அணிவிக்கும் உடைகளை அணிவித்து, பிளாஸ்டிக் பையினுள் வைத்து எடுத்துச்சென்றுள்ளார்.

30 செல்சியஸ் பாகை கடும் வெப்பமான காலநிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அப்பெண்ணின் கையிலிருந்த பையிலிருந்து குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட வழிபோக்கர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸாரால் அப்பெண தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவரது கையிலிருந்த பையை பறித்து குழந்தையை வெளியே எடுக்கப்பட்டது, பின்னர் குழந்தையை பொலிஸார்  தமது காரில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

குழந்தையின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், வைத்தியர்கள் அதனை கண்காணித்து வருகின்றனர்.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version