அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுதங்களஞ்சியங்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது.

ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சவுத் ஏசியன் மொனிட்டரிற்காக பி.கே பாலசந்திரனுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

கேள்வி- தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையை இலங்கை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தப்போகின்றது?

ஒருநாட்டில் மாற்றம் பெறக்கூடிய பல விடயங்கள் உள்ளன.அது ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகளை மாற்றலாம் ஆனால் நாட்டின் அமைவிடத்தினை அதனால் மாற்ற முடியாது.

இலங்கையின் அமைவிடத்தின் முக்கியம் காரணமாக இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள முக்கிய நாடுகளுக்கு இலங்கை மிகவும் கவரும் தன்மையை கொண்டதாக காணப்படுகின்றது.
ஆனால் இந்த கவரும் தன்மையுடன் பல சவால்களும் உருவாகின்றன.

இலங்கை இந்த சாதகதன்மையையும் சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
இலங்கை மக்களுக்கு அரசியல் பொருளாதார இராஜதந்திரரீதியில் நன்மையளிக்கும் வகையில் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு கடுமையாக பாடுபடவேண்டும்.

இந்த மூலோபாய நலன்கள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது எங்களுக்கு தெரியாது.உலகில் அனைத்து விடயங்களும் மாற்றமடையலாம்.

இதன் காரணமாகவே ஜனாதிபதிஇலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணும் நாடாகவிளங்கவேண்டும் என விரும்புகின்றார்.

இதேவேளை நாங்கள் ஒருவருக்கு எதிராக இன்னொரு நாடு இலங்கை மண்ணை பயன்படுத்துவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.


ஏனென்றால் நாங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கை இந்தியாவின் கடல்சார்வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றது.

சிவ்சங்கர் மேனன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது போல பாக்குநீரிணையின் 40 கடல்மைலுக்குள் காணப்படும் விமானந்தாங்கி கப்பலாக இலங்கை காணப்படக்கூடாது.

இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக விளங்கக்கூடாது என்பதை நாங்கள் கண்டிப்பாக மனதில் வைத்திருக்கவேண்டும், ஜனாதிபதி இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார் .

இந்தியாவின் மூலோபாயபாதுகாப்பு தேவைகள் அபிலாசைகள் குறித்து மிகவும் அவதானமாகயிருக்கவேண்டும்,இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளுக்கு எங்கள் கடற்பரப்பினைபயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது.

பாதுகாப்பு விடயத்தில் நாங்கள் இந்தியாவுடன சிறந்த உறவை கொண்டுள்ள அதேவேளை பல நாடுகள் இலங்கையுடன் இராணுவஉறவை ஏற்படுத்திக்கொள்வதில் விருப்பமாக உள்ளதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

ஆனால் நாங்கள் ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு உறவுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

இந்த உடன்படிக்கைகள் எங்கள்தேசிய பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

பொருளாதார தொடர்புகளில் இருந்து வேறுபட்ட பாதுகாப்பு தொடர்புகள் எங்களுக்கு தேவையில்லை.

இந்தியாவும்இதேகொள்கையை கொண்டுள்ளது.

கேள்வி- அமெரிக்காவும் சீனாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளன –சீனாவை முடக்குவதற்கு அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அமெரிக்கா அனைத்தையும் செய்கின்றது-இது இலங்கையை எவ்வாறு பாதிக்கும், சீனா இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது இந்த முதலீடுகள் பாதிக்கப்படுமா?

 

 

பதில்– இரண்டு யானைகள் மோதும்போது புற்கள் நசுங்கும்.அமெரிக்காவும் சீனாவும் தற்போது வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளன.அது இலங்கையை சில வழிகளில் பாதிக்கும்.

உதாரணத்துக்கு ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு தலைப்பட்ச தடை இலங்கையின் ஈரானுக்கான தேயிலை ஏற்;றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்கா சிசிசிசி உட்பட 24 நிறுவனங்களுக்கு தடைவிதித்துள்ளது.இந்த நிறுவனம் இலங்கையில் பாரிய கட்டுமான பணிகளில்ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான சீனா ஹார்பர் என்ஜினியரிங் நிறுவனம் போர்ட் சிட்டியின் கட்டுமான பணிகளை முன்னெடுத்துள்ளது.ஆனால் இந்த நிறுவனம் அமெரிக்காவின் பட்டியலில் இல்லை.

இந்த திட்டத்தை வர்த்தகயுத்தம் எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியாது.
போர்ட்சிட்டியின் அடுத்த கட்டம் சர்வதேச முதலீட்டாளர்களை கவருவதற்கான உட்கட்டுமானமாகும்.

தற்போதைய சூழலில் நாங்கள் பலதரப்பட்டவர்களிடமிருந்து முதலீடுகளை பெறவேண்டும்.
இது முக்கியம்ஏனென்றால் கொழும்பு போர்ட் சிட்டியை கைவிடமுடியாது.

கேள்வி- இலங்கை எம்.சி.சி உடன்படிக்கையையும் சோபா உடன்படிக்கையையும் அங்கீகரிக்கவேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுக்கின்றது,எனினும் இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் இலங்கையின் அரசமைப்;பிற்கு முரணானவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்- எம்.சி.சி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கப்பட்டதும் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிப்போம் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

இது குறித்து தீர்மானம் எடுப்பதை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது.
ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும்.

எந்த உடன்படிக்கை தொடர்பான எந்த இறுதி முடிவும் நாட்டின் நலன்கள், அரசமைப்பு சட்டம் ஆகியவற்றை கருத்தில்கொண்டதாக காணப்படவேண்டும்.

 

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version