இன்று முதல் வீதியின் வலது பக்க நிரலில் மாத்திரம் பஸ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்த வேண்டும் என்று சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பஸ் உள்ளிட்டவற்றுக்கான வீதி நிரல் பரீட்சார்த்த நடவடிக்கை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதி நிரலைத் தவிர்த்து வீதி முழுவதிலும் செல்வதினாலே வாகன நெரிசல் ஏற்படுவதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.