இங்கிலாந்தில் பொதுப்போக்குவரத்து பஸ் ஒன்றில் பயணித்த நபரொருவர் முகக்கவசத்துக்கு பதிலாக விசாலமான பாம்பு ஒன்றை தனது முகத்தில் முகக்கவசமாக சுற்றிக்கொண்ட சம்பவம் சக பயணிகளை பீதியடைய செய்துள்ளது.
ஸ்வின்டனில் இருந்து மான்செஸ்டர் வரை சேவையில் ஈடுபடும் பஸ்ஸினுள் சல்போர்ட் நகர பஸ் தரிப்பிடத்தில் வைத்து இந்நபர் ஏறியுள்ளார்.
அந்நபரின் கழுத்தையும் முகத்தையும் ஒரு முகக்கவசம் போல் அப்பாம்பு சுற்றியிருந்தது. அவர் அதனை கழுத்திலிருந்து அகற்றி, பஸ்ஸின் கைப்பிடியில் சுற்றிவிட்டதையடுத்து சக பயணிகள் அதிர்த்தியடைந்துள்ளனர்.
எனவே, பயணிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஸ்காப் மற்றும் ஏனைய துணைகளை பயன்படுத்துமாறு. அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிலர் உள்ளாடைகளைக் கூட முகக்கவசங்களுக்கு மாற்றீடாக பயன்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், சாப்பாடு பொதிசெய்யப்படும் பெட்டியை முகக்கவசமாக அணிந்தமை சமூகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.