சென்னை: காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மனைவியின் ஆபாச படத்தையும் பதிவிட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான். அதிர்ச்சியடைந்த மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உறவினர்கள் கொடூர கணவன் மீது போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

கணவன்தானே என்று தனிமையில் இருக்கும் தருணங்களில் அந்தரங்க புகைப்படங்களை எடுக்க அனுமதித்தாலும் சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடிந்து விடுகிறது.

சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்ததோ கொடூரத்தின் உச்சம். நம்பி வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதோடு நிர்வாணப்படத்தையும் ஃபேஸ்புக்கில் போட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான்.

இந்த அவலம் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண்ணிற்கு நிகழ்ந்துள்ளது.

அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலதி. இவருக்கு கடந்த 2010ஆ ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

வாழ்க்கை இப்படி சரியில்லாமல் போய்விட்டதே என்ற கவலையில் இருந்த மாலதியின் வாழ்க்கையில் நுழைந்தான் திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி.

இரண்டாவது வாழ்க்கையாவது சரியாக அமையட்டுமே என்று விஜயபாரதியை நம்பி காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மாலதி.

 

முதலில் இனித்த வாழ்க்கை நாளாக நாளாக கசப்படைய ஆரம்பித்தது காரணம் விஜயபாரதி கொடுத்த தொந்தரவுகள்தான்.

காதல் வார்த்தை பேசியவன், பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டான் விஜயபாரதி.

அதிர்ச்சியடைந்த மலாதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்று விட்டார்.

விடாமல் விரட்டிய விஜயபாரதி, போன் மூலம் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான். பத்து லட்சம் பணம் கொடுக்காவிட்டால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டினான்.

அதிர்ச்சியடைந்த மாலதியோ, புருஷன் என்று நம்பினேன்… இப்படி அசிங்கப்படுத்தலாமா என்று அழுதார்.

அதற்கெல்லாம் மனம் இறங்காத அந்த கொடூரன், மனைவி என்றும் பாராமல் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி அசிங்கப்படுத்தினான்.

இதனால் அதிர்ந்து போன மாலதி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். காப்பாற்றிய உறவினர்கள் விஜயசாரதி மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

அயனாவரம் காவல் நிலையத்தில் மாலதியின் உறவினர் ஸ்ரீதரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயபாரதியை தேடி வந்தனர்.

சென்னையில் பதுங்கியிருந்த விஜயபாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வரதட்சணை கொடுமை செய்ததும் ஃபேஸ்புக்கில் நிர்வாண படம் வெளியிட்டதும் உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version