அவுஸ்திரேலியக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நூற்றுக்கணக்கான திமிங்கலங்களில் இதுவரையில்  90 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாகவும்  ஏனையவை உயிருக்குப் போராடி வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.


டாஸ்மேனியா(Tasmania)அருகிலுள்ள பெரிய மணல் திட்டில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் சிக்கியுள்ளதாகவும் இதே போல் மேலும் 3 இடங்களில் 270க்கும் அதிகமான திமிங்கலங்கள் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொதுமக்களைச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அவுஸ்திரேலிய அரசு குறித்த திமிங்கலங்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version