திருகோணமலையில்  10 வயதான  மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பை   நேற்று (21)  வழங்கினார்.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கடற்படைத் தளம் ஒன்றில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றிய குற்றவாளி, குறித்த மாணவியை துஷ்பிரயோகம் செய்தார் என மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றச்சாட்டுப் பத்திரம்  திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் கடந்த 2019 பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த விசாரணை முடிவுற்று  குற்றவாளிக்கு திறந்த நீதிமன்றில்  மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மூன்றிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார்.

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும், குறித்த நஷ்டஈட்டை செலுத்த தவறினால் ஒரு வருடக் கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் நீதிவான் தீர்ப்பளித்து உத்தரவாட்டார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version