வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

 

நேற்றையதினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார்.

இன்று காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தார்.

தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு. சடலம் மீட்கபட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த 34 வயதான சு.நாகேந்திரன்  என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version