சுவிஸ்லாந்து- லொசானில் உள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலைகளில் ஒன்றான École hôtelière de Lausanne (EHL)இல் உள்ள அனைத்து இளங்கலை திட்ட மாணவர்களும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு பின்னர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 28ஆம் திகதி வரை, விருந்தோம்பல் பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களில் முக்கால்வாசி பேர், அதாவது சுமார் 2,500 மாணவர்கள் தனிமையில் இருக்க வேண்டியிருக்கும். கன்டனில் உள்ள சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதி, இரவு விடுதிகளை மூடி, 100க்கும் மேற்பட்டவர்களின் தனியார் நிகழ்வுகளை கேன்டன், தடை செய்தது. உள்ளே உள்ள அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாகும்.