யாழ்ப்பாண மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட  குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 14 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டன.

யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக பொது இடங்களில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்டன.

இது தொடர்பில் துவிச்சக்கர வண்டிகளை தொலைத்த பலர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் யாழ்ப்பாணம் உரெழு பகுதியில் வைத்து இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மானிப்பாய் சாவற்காட்டு பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மூவரிடமும் மேற்கொளப்பட்ட விசாரணைகள் ஊடாக திருடப்பட்டதாக கூறப்படும் 14 துவிச்சக்கர வண்டிகளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version