யாழ்ப்பாணம், சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு முன்பாக தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இப் போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புகள் இணைந்துள்ளன.
கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.
இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகிறது.