லண்டனின் தென்பகுதியில் உள்ள குரொய்டொன் தடுப்பு நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை சுட்டுக்கொன்ற நபர் இலங்கையை சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் இலங்கை பின்னணியை கொண்டவர் அவரை பொலிஸ்நிலையத்திற்கு வெளியே சோதனையிட்டவேளை அவரிடம் போதைப்பொருட்களும் துப்பாக்கி ரவைகளும் காணப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் சார்ஜன்டின் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவேளை அவரதுகைகள் பிணைக்கப்பட்டிருந்தன என பொலிஸ் கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக மட் என அழைக்கப்படும் மட்டியுரட்டான (Sergeant Matiu) Ratana, who was 54,              என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தன்மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(Sergeant Ratana (pictured with his partner Sue) was allegedly shot by a 23-year-old man who was detained for possession of ammunition at Croydon custody centre in South London)

பொலிஸார் அவரை சோதனையிடமுயன்ற தருணத்தில் தனது உடம்பில் மறைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் மட்டின் மார்பில் குண்டுகள் பாய்ந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் அரசாங்கத்தின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகாரிகளுக்கு அறிமுகமானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் தீவிரவாத மயப்படுத்தலை தடுக்க முயலும் பிரிவிற்கு சந்தேகநபரை பற்றி தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version