காணாமல் போன நிலையில் தேடப்பட்ட வந்த பாடசாலை மாணவி நானுஓயா – டெஸ்போட் ஆற்றிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

நானுஓயா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த மாணவி நள்ளிரவு 1.50 அளவில் பின்னர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் குறித்த மாணவியின் சடலம் நானுஒயா டெஸ்போட் கீழ் பிரிவிலுள்ள ஆற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்த மாணவி நேற்றைய தினம் மாலை மேலதிக வகுப்பிற்கு சென்றதாக கூறியுள்ளார். எனினும் மாணவி நேற்று வகுப்பிற்கு செல்லவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version