ஸிம்பாப்வேயை சேர்ந்த அந்தனி கபண்டா எனும் நபரொருவர் தனது மனைவியை அப்பெண்ணின் மைத்துனரிடம் பாலியல் தேவைக்காக அடகு வைத்து அதற்கு ஈடாக உணவு, மதுபானம் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை கட்டணங்களை பெற்றுள்ளார்.
எனினும், தனது புதிய துணை தன்னிடம் அன்பாக இருப்பதால் பழைய கணவரான கபண்டாவிடம் திரும்பிச் செல்ல அவரின் மனைவி தபட்ஸ்வா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், இவ்விடயத்துக்கு தீர்வு காணும் பொருட்டு, மெனிகலேண்ட் மாகாணத்தின் ஸிமுனியா கிராம தலைவரி;டம் இந்த விவகாரத்துக்கு தீர்வுகோரி கபண்டா முறையிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
டேனியல் மஸிகாட்டி என்பவர் தபட்ஸ்வாவின் சகோதரியை திருமணம் செய்திருந்தார். எனினும், சில நாட்களில் அவர் உயிரிழந்ததனால் சில ஆண்டுகள் மஸிகாட்டி தனிமையில் வசித்துவந்தார்.
இந்நிலையில், கபண்டாவுக்கும் இக்காலப்பகுதியில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, உணவு பொருட்கள், மதுபானம் மற்றும் குழந்தைகளுக்காக பாடசாலை கட்டணம் என்பவற்றை மஸிகாட்டியிடமிருந்து கோரியுள்ளார். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்.
எனினும், சில காலத்தின் பின்னர் இந்த ஏற்பாடுகளிலிருந்து பின்வாங்கிய கபண்டாவின் மனைவி, தான் நிரந்தரமாக மஸிகாட்டியுடன் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தனது பழைய கணவரை விட புதிய துணையிடம் அதிக அன்பு கிடைப்பதாக கராகன்டா எனும் தொலைகாட்சி அலைவரிசையிடம் கபண்டாவின் மனைவி தபாட்ஸ்வா தெரிவித்துள்ளார்.