புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த கும்பலொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு ஊர்தீவுச் சிவன் கோயில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version