திவுலப்பிட்டிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

39 வதான குறித்த பெண் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரது மகளுக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் 16 வயதுடையவர் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version