கசகஸ்தானில் நபர் ஒருவர் 16 வயதுக்கு குறைவான சிறுமியை சீரழித்ததற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிறு பிள்ளைகளை சீரழிப்பவர்கள் இனிமேலும் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு ரசாயனம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி ஆண்மையை அகற்றும் பழக்கம் கசகஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த குறிப்பிட்ட நபருக்கு அந்த ஊசி போடப்பட்டது.

நடக்கக்கூட முடியாமல் வலியால் துடிக்கும் அந்த நபர், என் எதிர்காலமே பாழாய்ப்போய்விட்டது.

விடுதலையானதும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்.

ஆனால் இப்போது என்னால் நடக்கக்கூட முடியவில்லை.

ஆக, இந்த தண்டனையை குற்றவாளிகள் எதிர்த்தாலும், பொது மக்களிடையே அதற்கு வரவேற்பு இருப்பது புரிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version